உள்நாடுபிராந்தியம்

மருதானையில் சைக்கிள் ஒன்று காருடன் மோதி விபத்து – ஒருவர் பலி

கொழும்பு – மருதானை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட டார்லி வீதியில் நேற்று வியாழக்கிழமை (13) மாலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக மருதானை பொலிஸார் தெரிவித்தனர்.

சைக்கிள் ஒன்று எதிர்த்திசையில் பயணித்த காருடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தின் போது, சைக்கிளின் செலுத்தனர் படுகாயமடைந்துள்ள நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் மாளிகாவத்தை பிரதேசத்தைச் சேர்ந்த 60 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

இதனையடுத்து காரின் சாரதி சந்தேகத்தின் பேரில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மருதானை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

விளையாட்டுத்துறை முன்னேற்றம் குறித்து கணக்காய்வு நடத்தப்பட வேண்டும் – பிரதமர் ஹரிணி

editor

ரயில்வே திணைக்களத்தின் விசேட அறிவிப்பு!

லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் இராஜிநாமா

editor