உள்நாடு

மருதானை துப்பாக்கிச் சூட்டு சம்பவம் – பெண் ஒருவர் கைது

மருதானை துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் பெண் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைதான பெண் துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தின் போது மோட்டார் சைக்கிளில் வந்த சாரதியின் நண்பி என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக குறித்த மோட்டார் சைக்கிளில் சாரதி கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது அவரது நண்பியும் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த இருவரும் துப்பாக்கிச் சூட்டு சம்பவத்திற்குப் பிறகு உணவகமொன்றிற்குச் சென்றுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

மருதானை, பஞ்சிகாவத்தை பகுதியில் இன்று (06) அதிகாலை நடந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் காயமடைந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

JustNow: தென்னாபிரிக்க ஜனாதிபதி அவசரமாக இலங்கை வந்தடைந்தார்!!

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறிக்கு விடுதலை

இடைமாறும் பயணிகளுக்கான காத்திருப்பு கால அவகாசம் நீடிப்பு