உள்நாடுபிராந்தியம்

மரத்தில் மோதி விபத்தில் சிக்கிய வேன் – 11 பேர் காயம்

மஹியங்கனை – கிராதுருக்கோட்டை பிரதான வீதியில் உள்ள சொரபோர வெவ முதலாம் தூண் பகுதியில் யாத்திரீகர்களை ஏற்றிச் சென்ற வேன் ஒன்று வீதியை விட்டு விலகி மரத்தில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

நேற்று (26) இரவு 11 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

இதில் வேனில் பயணித்த 11 பேர் காயமடைந்து மஹியங்கனை வைத்தியசாலை மற்றும் பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பதுளை பகுதியைச் சேர்ந்த இவர்கள் அனுராதபுரத்திற்குச் சென்று திரும்பிக் கொண்டிருந்தபோது இந்த விபத்து ஏற்பட்டது.

காயமடைந்தவர்களில் 6 பேர் பதுளை வைத்தியசாலையிலும், 5 பேர் மஹியங்கனை வைத்தியசாலையிலும் சிகிச்சை பெற்று வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Related posts

கொழும்பு மாவட்டத்தில் இரு பிரிவுகள் முடக்கம்

ஹர்த்தாலுக்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் – சுமந்திரன் வேண்டுகோள்

editor

நாடளாவிய ரீதியில் ஏற்பட்ட மின் தடைக்கான காரணத்தை வௌியிட்ட இலங்கை மின்சார சபை

editor