கடந்த சில நாட்களாக அதிகரித்து வந்த பல காய்கறிகளின் விலைகள் தற்போது குறைந்து வருவதாக தம்புள்ளை விசேட பொருளாதார மைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இருப்பினும், ஒரு கிலோ பீன்ஸின் விலை இன்னும் 1,000 ரூபாவுக்கும் அதிகமாக விற்பனையாகி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, ஒரு கிலோ கெரட்டின் மொத்த விலை இன்று 200 ரூபாவாக குறைந்துள்ளது, அதே நேரத்தில் பீட்ரூட், முள்ளங்கி, நோகோல், வெள்ளரி, கத்திரிக்காய், தக்காளி போன்ற காய்கறிகளின் விலையும் 250 ரூவாகக் குறைந்துள்ளது.
இதற்கிடையில், தற்போது தண்ணீர் குறைந்து விட்டாலும், அனைத்து நெல் வயல்களும் மணல் திட்டுகளால் நிரப்பப்பட்டுள்ளதால், பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள விவசாயிகள் கடுமையான நெருக்கடியை எதிர்கொள்வதாகக் கூறுகின்றனர்.
