வணிகம்

மரக்கறிகளின் விலை 4 மடங்கு அதிகரிப்பு

(UTV|கொழும்பு) – கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இந்த வருடம் மரக்கறிகளின் விலை 4 மடங்கு அதிகரித்துள்ளதாக தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தின் செயற்குழு உறுப்பினர் I.J. விஜேநந்த குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் நிலவிய மழையுடனான வானிலை காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதற்கமைய தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் ஒரு கிலோ கரட் 380 ரூபாவாக காணப்படுவதுடன், கறிமிளகாய், தக்காளி, போஞ்சி உள்ளிட்ட மரக்கறிகளின் விலைகளும் அதிகரித்துள்ளன.

இதேவேளை, எதிர்வரும் இரண்டு, மூன்று மாதங்களில் மரக்கறிகளின் விலை மீண்டும் வீழ்ச்சியடையும் என தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தின் செயற்குழு உறுப்பினர் I.J. விஜேநந்த சுட்டிக்காட்டியுள்ளார்.

Related posts

Oracle Cloud அப்ளிகேஷன் ஊடாக MillenniumIT ESP க்கு வலுவூட்டல்

எமிரேட்ஸ் இலங்கையுடன் கைகோர்த்து 35 ஆண்டுகள்

முட்டைக்கான மொத்த விலை அதிகரிப்பு