சாய்ந்தமருது ஜனாஸா நலன்புரி மக்கள் பேரவையின் அங்கத்தவர்களுக்கான உத்தியோகபூர்வ டீ-சேர்ட் இன்று (27) அறிமுகம் செய்து வைக்கப்பட்டது.
சாய்ந்தமருது ஜனாஸா நலன்புரி மக்கள் பேரவையின் ஏற்பாட்டில், சுனாமி 21ஆம் ஆண்டு நினைவுநாளை முன்னிட்டு நடைபெறும் மாபெரும் இரத்ததான முகாம் நிகழ்வின் போது, இந்த டீ-சேர்ட் உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டது.
மயோன் குரூப் சார்பாக, சாய்ந்தமருது மயோன் ரவல்ஸ் அண்ட் டூவர்ஸ் நிறுவனத்தின் பணிப்பாளர் எ.எல்.எம்.நியாஸ் அவர்கள், ஜனாஸா நலன்புரி மக்கள் பேரவையின் தலைவர் அஸ்வர் ஆதம்பாவா அவர்களிடம், றிஸ்லி முஸ்தபா அவர்களின் சார்பில் டீ-சேர்ட்டை கையளித்தார்.
-அம்பாறை நிருபர் பாறுக் ஷிஹான்
