உள்நாடு

மன்னார் மறைமாவட்ட ஆயர் – ரிஷாட் சந்திப்பு

(UTV | கொழும்பு) – மன்னார் மறைமாவட்ட ஆயர் இம்மானுவல் பெர்ணாண்டோ ஆண்டகை அவர்களை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் நேற்று(23) மாலை மன்னார் ஆயர் இல்லத்திற்கு சென்று சந்தித்துள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனுடன் கிழக்கு மாகாண பாராளுமன்ற உறுப்பினர் முஷர்ரப் முது நபீன் சென்றிருந்தார்.

இதன் போது குறித்த இரு பாராளுமன்ற உறுப்பினர்களும் சினேக பூர்வமாக சந்தித்து பல்வேறு விடயங்கள் தொடர்பாக மன்னார் மாறைமாவட்ட ஆயர் இம்மானுவல் பெர்ணாண்டோ ஆண்டகையுடன் கலந்துரையாடினர்.

குறித்த கலந்துரையாடலின் போது மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை அன்ரனி விக்டர் சோசை அடிகளார் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

  • ஊடகப் பிரிவு-

Related posts

பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுலுக்கு

ஆட்பதிவு ஆணையாளர் நாயகம் பதவிக்கு புதிய அதிகாரி

editor

இவ்வருடம் அரிசி இறக்குமதி இல்லை!