உள்நாடுபிராந்தியம்

மன்னார் நோக்கி பயணித்த சொகுசு பஸ் – பெரியகட்டு பகுதியில் விபத்து – பலர் காயம்

கொழும்பிலிருந்து மன்னார் நோக்கி பயணித்த தனியார் சொகுசு பயணிகள் பஸ் ஒன்று மன்னார் – மதவாச்சி பிரதான வீதியில் பெரியகட்டு பகுதியில் இன்று (22) அதிகாலை விபத்திற்குள்ளானது.

பஸ் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த விபத்தில் பலர் காயமடைந்துள்ள நிலையில், செட்டிக்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றன.

-மன்னார் நிருபர் லெம்பட்

Related posts

5 வகையான உரங்களின் விலைகளை குறைக்க நடவடிக்கை

editor

கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 14 ஆயிரத்தைக் கடந்தது

மின்சாரம் மற்றும் எரிபொருளின் விலைகளை பாரியளவில் குறைக்க அரசாங்கம் நடவடிக்கை.