உள்நாடுபிராந்தியம்

மன்னார் காற்றாலை திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வவுனியாவில் ஆர்ப்பாட்டம்

மன்னார் பகுதியில் நிறுவப்படவுள்ள காற்றாலை மின் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும் பொலிஸாரால் வெள்ளிக்கிழமை (26) மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைக்கு கண்டனம் வெளியிட்டு வவுனியாவில் சனிக்கிழமை (27) ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டதுடன் துண்டுப்பிரசுரமும் வழங்கப்பட்டது.

மக்கள் போராட்ட இயக்கம் மற்றும் வவுனியாமாவட்ட சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பு ஆகியன இணைந்து குறித்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்திருந்தது.

இதன்போது கருத்து தெரிவித்த அவர்கள்,

மன்னாரில் கடந்த56 நாட்களாக போராடி வரும் மக்களின் உணர்வுகளை மதிக்காமல் இந்தஅரசு மக்களுக்கு விரோதமான முறையில் காட்டுமிராண்டித்தனமான செயற்ப்பாட்டை முன்னெடுத்துள்ளது.

எனவே இந்த திட்டத்தை அரசு உணடியாக மீள்பரிசீலனை செய்யவேண்டும். என்று தெரிவித்தனர்.

வவுனியா பழையபேருந்து நிலையப்பகுதியில் குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டதுடன் அங்கிருந்து நகரின் பல்வேறு பகுதிகளுக்கு பேரணியாக சென்ற போராட்டக்காறர்கள் பொதுமக்களுக்கு துண்டுபிரசுரங்களை வழங்கிவைத்தனர்.

Related posts

இலங்கைக்கு 2, 500 பசுக்களை கொண்டுவர அரசு தீர்மானம்

மோட்டார் சைக்கிள் விபத்தில் 17 வயது இளைஞன் பலி – காத்தான்குடியில் சோகம்

editor

ரூமியின் பிணை மனு நிராகரிப்பு