அரசியல்உள்நாடுபிராந்தியம்

மன்னாரில் பனை சார் கைப்பணி பயிற்சி – சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

பனை அபிவிருத்தி சபையினூடாக பனை சார் கைப்பணி பயிற்சி நெறியினை மேற் கொண்டவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வும் தெரிவு செய்யப்பட்ட பனை உற்பத்தியாளர்களுக்கான உபகரணங்கள் வழங்கும் வைபவமும் மன்னார் மாவட்ட செயலகத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை (21) மன்னார் மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வின் பிரதம அதிதியாக பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் கலந்து கொண்டார்.

மேலும் தொழில் அமைச்சின் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க, வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஜெகதீஸ்வரன், மன்னார் மாவட்ட செயலாளர் க.கனகேஸ்வரன், பெருந்தோட்ட அமைச்சின் ஒருங்கிணைப்பு செயலாளர் வசந்த மூர்த்தி, பனை அபிவிருத்தி சபை தலைவர் மற்றும் அதன் அதிகாரிகள், உத்தியோகத்தர்கள், மன்னார் நகர சபை, நானாட்டான் பிரதேச சபை தவிசாளர்கள் மற்றும் பனை உற்பத்தியாளர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

அதனை தொடர்ந்து மன்னார் எழுத்தூர் பிரதேசத்தில் பனை விதை நடும் நிகழ்வும் இடம்பெற்றது.

Related posts

கோழி இறைச்சியின் விலை அதிகரிப்பு

editor

இலங்கைக்கு நிதியுதவி வழங்க கொரியா எக்ஸிம் வங்கி இணக்கம்

editor

அமெரிக்க, ரஷ்ய, சீன உயரதிகாரிகள் இன்று இலங்கைக்கு