அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1விசேட செய்திகள்

மனிதப் புதைகுழிகளின் அகழ்வுப் பணிகளுக்கு அரசாங்கம் ஒத்துழைக்கையில் சர்வதேச தலையீடுகள் அவசியப்படாது – பிரதி அமைச்சர் முனீர் முளப்பர்

மனிதப் புதைகுழிகளின் அகழ்வுப் பணிகளுக்கு அரசாங்கம் ஒத்துழைக்கையில் வேறு எந்த சர்வதேச தலையீடுகளும் அவசியப்படாதென பிரதி அமைச்சர் முனீர் முளப்பர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து விளக்கமளித்த பிரதி அமைச்சர்:

செம்மணி போன்ற புதைகுழிகளில் அகழ்ந்தெடுக்கப்படும் மனித எலும்புக்கூடுகளை மேலதிக ஆய்வுகளுக்குட்படுத்த சர்வதேச நிபுணர்களின் உதவி தேவைப்படலாம்.

மனித புதைகுழிகள் தொடர்பான விசாரணைகளுக்கு சர்வதேச உதவிகள் தேவையென வடக்கிலுள்ள சில குழுக்கள் வேண்டுகோள் விடுக்கின்றன.

இந்த அகழ்வு நடவடிக்கைகளில் எந்த வகையிலும் அரசாங்கம் தலையிடப்போவதில்லை.

நேர்மையான விசாரணைக்கான சூழ்நிலையே தற்போது நாட்டில் உள்ளது .இவ்விசாரணைகள் விடயத்தில் சர்வதேச நிபுணத்துவம் எமக்கு தேவைப்படலாம்.

எலும்புக்கூடுகளை அடையாளம் காண்பதற்கு அல்லது மேலதிக நவீன தடயவியல் பரிசோதனைகளை மேற்கொள்வதற்கே இவ்வாறு சர்வதேச உதவிகள் தேவைப்பட நேரிடும்.

இவ்வாறு தேவைப்பட்டால் இது குறித்த ஆலோசிக்க நாங்கள் தயார். எனினும்,வேறு சர்வதேச தலையீடுகளுக்கு அவசியமில்லை.

இப்பணிகளுக்கு அரசாங்கம் முழுமையாக ஒத்துழைக்கல் வேறு வகையிலான தலையீடுகள் அவசியப்படாது என்றார்.

Related posts

போதைப் பொருளுக்கு எதிராக அடுத்த வாரம் பாரிய ஆர்ப்பாட்ட பேரணி..

ஹிஜாஸ் தொடர்ந்தும் விளக்கமறியலில்

எக்ஸ்பிரஸ் பேர்ல் பேச்சுவார்த்தை வெற்றி!