உள்நாடு

மனித நேயத்துக்காக பாடுபடுவோருக்கு பாராட்டு

(UTVNEWS | கொவிட் – 19) –கொரோனா வைரசு தொற்றை தடுக்கும் மனித நேயத்துக்காக பாடுபடும் ஜனாதிபதி மாவட்ட நிருவாகிகளுக்கு கிறிஸ்தவ சமூகத்தினர் மட்டக்களப்பு நகரில் பாராட்டி பதாகைகளை காட்சிப்படுத்தியுள்ளனர்.

கோவிட் 19 கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு மனிதநேயத்துக்கு பாடுபட்ட ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸ மற்றும் வைத்தியநிபுணர்கள், தாதியர்கள், மருத்துவப் பணிப்பாளர்கள், மற்றும் மாவட்ட நிருவாகிகளுக்கு மட்டக்களப்பு மறைமாவட்ட கிறிஸ்தவ வாழ் சமூகம் பாராட்டு தெரிவித்து மட்டக்களப்பு நகரின் பல இடங்களில் பாராட்டு பதாகைகளை காட்சிப்படுத்தியுள்ளனர்.DSC 0347

மட்டக்களப்பு மறைமாவட்ட கிறிஸ்தவவாழ் சமூகத்தின் ஆன்மீக இயக்குனர் அருட்தந்தை போல் சற்குணநாயகத்தின் தலைமையில் செயல்படும் ஆன்மீகக்குழுவினர் இந்த பாராட்டு பதாகைகளை இன்று நகரின் பல இடங்களில் காட்சிப் படுத்தியுள்ளனர்.

 

(அரசாங்க தகவல் திணைக்களம்) 

Related posts

பகிடிவதை தொடர்பில் பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவிற்கு உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

editor

பல்கலைகழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் திடீர் மரணம்!

பாண் விலையை குறைக்காவிடின் கட்டுப்பாட்டு விலை.