வகைப்படுத்தப்படாத

மனித உரிமை கவுன்சிலில் இருந்து அமெரிக்கா விலகியது

(UTV|AMERICA)-ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமை கவுன்சிலில் இருந்து அமெரிக்கா விலகுகின்றதாக ஐ.நா.வுக்கான அமெரிக்க தூதர் நிக்கி ஹாலே தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமை கவுன்சில் கடந்த 2006 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இந்த அமைப்பில் 47 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன.

ஐக்கிய நாடுகள் சபைக்கான அமெரிக்க தூதராக இருந்து வந்த நிக்கி ஹாலே இன்று ஊடகவியலாளர்களை சந்தித்து கருத்து தெரிவிக்கும் போது, ஐக்கிய நாடுகள் மனித உரிமை கவுன்சிலில் இருந்து அமெரிக்கா விலகுவதாக தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறுகையில், அரசியல் சார்பின் முரண்பாடு காரணமாகவே அமெரிக்கா இந்த முடிவை எடுத்துள்ளது.

மனித உரிமைகள் பற்றிய கேலிக்குரிய ஒரு பாசாங்குத்தனமான மற்றும் சுய சேவை நிறுவனத்தின் ஒரு பகுதியாக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை கவுன்சில் செயல்பட்டு வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாகவே நாங்கள் இந்த அமைப்பில் இருந்து விலகுவது என்ற நடவடிக்கை எடுத்துள்ளோம் என தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்ற பிறகு ஐ.நா.வின் யுனெஸ்கோ அமைப்பில் இருந்து அமெரிக்கா வெளியேறியதுடன், பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்தில் இருந்தும் வெளியேறுவதாக அண்மையில் அறிவித்திருந்தது.

ஐ.நா. சபையில் இஸ்ரேலுக்கு எதிராக நிறைவேற்றப்படும் தீர்மானங்களுக்கு அமெரிக்கா கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தது. எனவே, ஐ.நா. சபை மனித உரிமை கவுன்சிலில் இருந்து வெளியேறி விடுவோம் என தொடர்ந்து மிரட்டல் விடுத்து வந்தது குறிப்பிடத்தக்கது.

(மாலைமலர்)

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

பாராளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டது!

‘அப்பா எனக்கு உதவுங்கள், என்னைக் காப்பாற்றுங்கள்’ – உயிருக்கு போராடிய மகள் – [VIDEO]

Australia beat England to win 2nd Women’s Ashes ODI