கேளிக்கை

மனதை தொடும் கதைகள் தேடும் த்ரிஷா

(UTV|INDIA)-கதையின் நாயகியாக நடித்த நாயகி, மோகினி படங்களின் தோல்வியினால் மந்த நிலையில் இருந்து வந்த த்ரிஷாவின் மார்க்கெட், விஜய் சேதுபதியுடன் அவர் நடித்த 96 படத்தின் வெற்றிக்குப்பிறகு சூடுபிடித்து விட்டது. தற்போது ரஜினியுடன் பேட்ட படத்தில் நடித்திருப்பவர், பரமபத விளையாட்டு என்ற படத்தில் கதையின் நாயகியாக நடித்து வருகிறார்.

இதையடுத்து, ஜீவா நடித்துள்ள கொரில்லா பட நிறுனம் தயாரிக்கும் புதிய படம் உள்பட மேலும் 2 படங்களில் தற்போது கமிட்டாகியிருக்கும் த்ரிஷா, பல டைரக்டர்களிடம் தொடர்ந்து கதை கேட்டு வருகிறார். 96 படம் கொடுத்த வெற்றியை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக மனதை தொடும் கதைகளில் மட்டுமே இனி நடிப்பது என்றும் முடி வெடுத்துள்ளார் த்ரிஷா.

 

 

 

 

 

Related posts

தலைகீழான சமந்தா

முக்கிய மைல்கல்லை தொட்ட சாமி ஸ்கொயர் டிரைலர்

எமியின் திருமணம் நடக்கவுள்ள இடம் இதுதான்?