உள்நாடு

“மத்திய வங்கியிலிருந்து, ஒரே நாளில் 50 இலட்சம் மாயம்” விசாரணை தீவிரம்

(UTV | கொழும்பு) –   இலங்கை மத்திய வங்கியின் வௌியீட்டு பெட்டகத்தில் வைப்பிலிடப்பட்டிருந்த 50 இலட்சம் ரூபா பணம் காணாமல் போனமை தொடர்பில் பல்வேறு தரப்பினரிடம் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

அன்றைய தினம் குறித்த பிரிவில் கடமையாற்றிய சுமார் 15 பேரிடம் இன்று (11) வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதாக கோட்டை பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

அதற்கு மேலதிகமாக, சிசிடிவி காட்சிகள் சில கைப்பற்றப்பட்டு விசாரணையும் தொடங்கப்பட்டுள்ளது.

50 இலட்சம் ரூபா பணக் கட்டு ஒன்று காணாமல் போயுள்ளதாக மத்திய வங்கியின் சட்ட வைத்திய நிதி திணைக்கள அத்தியட்சகர் ஏ.ஆர். தயானந்தா நேற்று (11) முறைப்பாடு செய்தார்.

மத்திய வங்கி கட்டிடத்தின் அதியுயர் பாதுகாப்பு பகுதியில் புதிய தொழில்நுட்ப பாதுகாப்பு கமராக்கள் பொருத்தப்பட்டுள்ள மூன்றாவது மாடியில் உள்ள அலமாரியில் இருந்து இந்த பணக் கட்டு மாயமாகியுள்ளதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பணம் வைக்கப்பட்டிருந்த அலமாரியில் ஆயிரம், 5000 ரூபாய் நாணயத் தாள் 8,000 பணக் கட்டுக்கள் இருந்துள்ள நிலையில், சம்பவத்தன்று, வங்கியில் இருந்து சுமார் 25 ஆயிரம் பில்லியன் ரூபாய் வௌிச் சென்றுள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த பணக் கட்டு தவறுதலாக வேறு அலமாரிக்கு சென்றுள்ளதா என்ற சந்தேகம் எழுந்துள்ளதாகவும், எனினும் குற்றம் நடந்துள்ளது என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு பாதுகாப்பு குறித்து இன்னும் முடிவு எடுக்கவில்லை – அமைச்சர் ஆனந்த விஜேபால

editor

இஸ்ரேலுக்கு எதிரான ஸ்டிக்கர் ஒட்டிய 22 வயது முஸ்லிம் இளைஞன் – பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது | வீடியோ

editor

கனடாவில் புகலிடம் கோரும் வெளிநாட்டவர்களை நாடு கடத்த ஏற்பாடு!