உள்நாடுவணிகம்

மத்திய வங்கியின் கீழ் உள்ள நிதி நிறுவனங்களது வீழ்ச்சிக்கு மத்திய வங்கியே பொறுப்பு 

(UTV | கொழும்பு) – மத்திய வங்கியின் கீழ் உள்ள நிதி நிறுவனங்கள் வீழ்ச்சியடைகின்றமைக்கு மத்திய வங்கி பொறுப்புக்கு கூற வேண்டுமென பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்திருந்தார்.

நிதி நிறுவனங்கள் தொடர்பில் அலரி மாளிகையில் இன்று (04)இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே, பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார்.

மத்திய வங்கியின் கீழ் உள்ள நிதி நிறுவனங்கள் தொடர்ச்சியாக வீழ்ச்சியடைகின்றமை மற்றும் அங்கு இடம்பெறுகின்ற முறைகேடுகள் குறித்து அரசாங்கம் அதிருப்தி அடைவதாகவும், இவ்வாறான நிலைமைகளினால் அரச நிதி நிறுவனங்கள் தொடர்பில் மக்கள் வைத்துள்ள நம்பிக்கை சீர்குலைவதாகவும் இதனை நிவர்த்தி செய்யும் வகையில் புதிதாக சட்டங்களை வகுத்து அல்லது நடவடிக்கைகளை எடுத்து இவ்வாறான நிலைமைகளை தடுக்க வேண்டும் எனவும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மேலும் சுட்டிக்காட்டியிருந்தார்.

Related posts

“GotaGo போராட்டம் முடிவுக்கு”

மதுபானம் கொடுக்கப்பட்டு வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்ட சிறுமி

குளத்திற்கு குளிக்க சென்ற சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழப்பு!

editor