உள்நாடு

மத்திய வங்கியின் கணக்காய்வு அறிக்கையினை சமர்ப்பிக்குமாறு கோரிக்கை [VIDEO]

(UTV|கொழும்பு) – பிணைமுறி மோசடி தொடர்பிலான மத்திய வங்கியின் கணக்காய்வு அறிக்கையினை நீதிமன்றிற்கு சமர்ப்பிக்குமாறு கோப் குழுவின் முன்னாள் தலைவரும் மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினருமான சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்தார்.

கோப் குழுவின் தலைவராக செயற்பட்ட காலத்தில் தன்னால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய குறித்த கணக்காய்வு அறிக்கை தயாரிக்கப்பட்டது எனவும் குறித்த அறிக்கை சமர்ப்பிக்கப்படும் பட்சத்தில் பிணைமுறி மோசடி தொடர்பிலான நீதிமன்ற விசாரணைக்கு அது சாட்சி ஒன்றாக அமையும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Related posts

கடந்த 24 மணிநேரத்தில் 180 பேர் கைது

IMF இணக்கப்பாட்டை பின் தொடர்வதால் மக்கள் தற்போது பல சிரமங்களை எதிர்கொள்கின்றனர் – சஜித் பிரேமதாச

editor

கொரோனாவிலிருந்து 5,581 பேர் மீண்டனர்