அரசியல்உள்நாடு

மத்திய வங்கி நிதியியல் அறிக்கைகள் ஜனாதிபதியிடம் கையளிப்பு

இலங்கை மத்திய வங்கியின் 2024 ஆம் ஆண்டுக்கான நிதியியல் அறிக்கைகள் மற்றும் தொழிற்பாடுகள் தொடர்பான அறிக்கையை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க இன்று (29) ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிடம் கையளித்தார்.

அறிக்கையின் பிரதியொன்றை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்கவினால் ஜனாதிபதி செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவிடமும் கையளிக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் மத்திய வங்கியின் உயர் அதிகாரிகள் சிலரும் கலந்து கொண்டனர்.

Related posts

நிறை குறைந்த பாண் விற்பனை | 100 வர்த்தகர்களுக்கு எதிராக வழக்கு !

உயர் நீதிமன்ற நீதிபதியாக யசந்த கோதாகொடவின் பெயர் பரிந்துரை

இலங்கை மத்திய வங்கி விடுத்துள்ள அறிவிப்பு !