வகைப்படுத்தப்படாத

மத்திய மாகாணத்திலும் அம்பியூலன்ஸ் வண்டி சாரதிகள் வேலை நிறுத்தபோராட்டம்

(UDHAYAM, COLOMBO) – அனைத்து மாகாணசபைகளிலும் சுகாதார நோயாளர் அம்பியூலன்ஸ் வண்டி சேவை உறுவாக்கம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து  அம்பியூலன்ஸ் வண்டி  சாரதிகள்  27.06.2017 காலை 8 மணிமுதல்   வே லை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்

இலங்கை சுகாதார சேவைகள் சங்கத்தினால் முன்னெடுக்கப்படும் இவ் ஆர்பாட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் மத்திய மாகாணத்திற்குட்பட்ட அம்பியூலன்ஸ்  சாரதிகளும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்

நோயாளர்களின் நலன் கருதி அவசர சேவைக்கென தலா 1 சாரதிகள் மாத்திரம் கடமையில் ஈடுபட்டுள்ளனர்  எனினும் ஒரு அம்பியூலன்ஸ் வண்டியை கொண்ட வைத்தியசாலைகளில் சாரதிகள் கடமையில் ஈடுபடவில்லை

மாகாணசபைகளிலும் சுகாதார நோயாளர் அம்பியூலன்ஸ் வண்டி சேவையை உறுவாக்குவதாக அதிகாரிகள் வாக்குருதியளித்து அதனை நிறவேற்றாமைக்கு எதிர்ப்பு தெரிவித்தே வேலை நிறுத்தம் முன்னெடுக்கப்படுகின்றது ஆர்பாட்டமானது  இரண்டு நாட்களுக்கு தொடரும் என அம்பிபியூலன்ஸ் வண்டி சாரதிகள் தெரிவித்தனர்.

நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இராமச்சந்திரன்

Related posts

காஷமீரில் ஊரடங்கு உத்தரவு

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 117 ஆக உயர்வு

Navy nabs 2 persons with heroin