உள்நாடு

மத்திய அதிவேக நெடுஞ்சாலையில் கோர விபத்து – ஒருவர் பலி – 07 பேர் காயம்

மத்திய அதிவேக நெடுஞ்சாலையில் 76.5 ஆவது கிலோமீற்றர் மைல்கல் அருகில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 07 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்து இன்று புதன்கிழமை (02) அதிகாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சொகுசு பஸ் ஒன்று மோட்டார் சைக்கிள்களை ஏற்றிச் சென்ற லொறி ஒன்றின் பின்புறத்தில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தின் போது சொகுசு பஸ்ஸில் பயணித்த ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 07 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

வவுனியாவில் வீட்டுத் தோட்டத்திற்குள் புகுந்த 9 அடி முதலை

editor

ஜூலை முதல் மின்கட்டணம் மாற்றியமைக்கப்படும்

நாட்டில் 171,169 PCR பரிசோதனைகள்