உள்நாடுபிராந்தியம்

மதுபோதையில் பஸ்ஸை செலுத்திய சாரதி கைது – நுவரெலியாவில் சம்பவம்

மதுபோதையில் வாகனத்தை செலுத்திய இலங்கை போக்குவரத்து சபை (SLTB) பேருந்து சாரதி ஒருவர் நுவரெலியா பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

வெலிமடை நோக்கிச் சென்ற குறித்த பேருந்தை வழிமறித்து சோதனையிட்ட பொலிஸார், சாரதி அதிக அளவில் மதுபோதையில் இருந்ததை உறுதி செய்தனர்.

கைது செய்யப்பட்ட போது பேருந்தில் பெருமளவான பயணிகள் இருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

சோதனைக்காக பேருந்து நுவரெலியா பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டபோது, சாரதியின் இருக்கைக்குப் பின்னால் சட்டவிரோத மதுபானம் இருந்த ஒரு தகரப் பெட்டியை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

சாரதி நீர் அருந்துவது போல் நடித்து, பயணத்தின் போது மது அருந்தியிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

இதற்கிடையில், பயணிகள் பாதுகாப்பாக தங்கள் இலக்கை சென்றடைவதை உறுதி செய்வதற்காக மற்றொரு சாரதியின் சேவை பெறப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சாரதி நுவரெலியா நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.

Related posts

தேசிய அடையாள அட்டை தொடர்பான புதிய அறிவிப்பு

காசல் மகப்பேற்று வைத்தியசாலை பணிகள் வழமைக்கு

SJB மீண்டும் UNPயுடன் ? ஹரீனின் அழைப்பு