மதுகம, சிரிகதுர, நாகஹவல பகுதியில் உள்ள கால்வாய் அருகே ஒரு தொகை துப்பாக்கி ரவைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இங்கு 50 MPMG தோட்டாக்கள், T – 56 துப்பாக்கிக்கு பயன்படுத்தப்படும் 6 தோட்டாக்கள், 2 ஷோட்கன் தோட்டாக்கள், 9 மில்லிமீற்றர் வகைக்குரிய 12 தோட்டாக்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பந்தப்பட்ட தோட்டக்களை அந்த இடத்தில் விட்டுச் சென்றவர்கள் தொடர்பில் எவ்வித தகவல்களும் வௌியாகவில்லை என்பதுடன் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.