உள்நாடுபிராந்தியம்

மதவாச்சி பகுதியில் 5,000 ரூபாய் போலி நாணயத்தாள்களுடன் 4 பேர் கைது

போலி நாணய தாள்களுடன் நான்கு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அனுராதபுரத்தின் மதவாச்சி பகுதியில் 5,000 ரூபாய் போலி நாணயத்தாள்களில் 145யும் மற்றும் அவற்றை அச்சிடப் பயன்படுத்தப்படும் பல மடிக்கணினிகள், கணினிகள் மற்றும் பிற உபகரணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளது.

கைதான சந்தேக நபர்களிடமிருந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் இந்த மோசடியில் ஈடுபட்ட மற்ற சந்தேக நபர்களையும் ஹபரணை பொலிஸார் கைதுசெய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இந்த சந்தேக நபர்கள் மதவாச்சி பகுதியில் போலியான நாணயத்தாள்களை அச்சிட்டு, ஹபரணை பகுதிக்கு வந்து அவற்றை மாற்றிக் கொண்டதாகவும், இந்த மோசடி நீண்ட காலமாக நடைபெறுவதாகவும் முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக ஹபரணை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related posts

முன்னாள் எம்.பி சுமந்திரனுக்கு வழங்கப்பட்ட இரண்டு மெய்ப்பாதுகாவலர்கள் – வெடித்தது புதிய சர்ச்சை

editor

ஈ.டி.ஐ நிறுவன பணிப்பாளர்கள் நால்வர் ஆணைக்குழுவில்

துறைமுக நகர சட்டமூலம் தொடர்பான மனுக்கள் மீதான பரிசீலனை ஆரம்பம்