உள்நாடு

மதம் கடந்து மனிதனைப் பார்க்கும் நாடு சவூதி அரேபியா..!

இலங்கையில் சவூதி அரேபியாவின் 11 வது மேம்பாட்டு முயற்சியான வயம்ப பல்கலைக்கழகம் நகர அபிவிருத்தி திட்டம் இன்று (14) திறந்துவைக்கப்பட்டது.

உண்மையில் சவூதி அரேபியா “மதம் கடந்த மனிதாபிமானம்” என்ற அடிப்படையில் மனிதாபிமானத்துக்கு மதம் இல்லை என்ற கோட்பாட்டில் உலகில் வாழும் எல்லா நாடுகளுக்கும் மனிதாபிமான உதவிகள் செய்து வருவது மிகவும் வரவேற்கத்தக்கது.

இலங்கைக்கு பல்வேறு உதவிகள் செய்துள்ளது. அதன் தொடரில் வயம்ப பல்கலைக்கழகத்தை பலப்படுத்தும் நோக்கத்தோடு உதவிகள் செய்துள்ளது மிகவும் பாராட்டப்பட வேண்டிய விடயம்.

மனிதன் சிறந்த மனிதன் என்பதற்கு அடையாளம் எந்த மனிதனாக இருந்தாலும் அவனது பசி, தாகம், தூக்கம் போன்ற அடிப்படைத் தேவைகளுக்கு உதவும் உள்ளம் கொண்டவனாக இருக்க வேண்டும்.

அந்த அடிப்படையில் முஸ்லிம்களுக்கு மாத்திரம் உதவி செய்ய வேண்டும் என்று நினைக்கின்ற சாதாரண சிந்தனைக்கு அப்பால் மனிதனுக்கு உதவி செய்ய வேண்டும் என்று சிந்திக்கின்ற சவூதி அரேபியா நாட்டினுடைய மனிதாபிமான பண்பை நாங்கள் பெரிதும் வரவேற்கிறோம்.

குறிப்பாக கல்விக்கு செய்கின்ற உதவி மாபெரும் தர்மம் என்பதை இத்திட்டத்தின் மூலம் அறிகிறோம். கல்வியே ஒரு சமூகத்தின் மேம்பாட்டுக்கு காரணமாகும்.

இது முன்னுதாரணம் மிக்க நடவடிக்கை என்றும் கூறலாம். ஒவ்வொருவரும் இந்த உலகில் வாழும் போது மற்ற மனிதனின் துன்பங்களில் பங்கு கொண்டு அதனை தீர்ப்பதற்கு முயற்சி செய்ய வேண்டும்.

எங்கள் தலைவர் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இந்த உலகத்தில் இப்படியான முன்னுதாரண மனிதராக மாநபியாக இருந்து வாழ்ந்து வழிகாட்டி இருக்கிறார்கள்.

இந்த வகையில் இப்பொழுது திறந்து வைக்கப்பட்டிருக்கின்ற பல்கலைக்கழகத்திட்டம் நபிகளாரின் சிந்தனையை பிரதிபலிக்கின்ற ஒரு செயல் என்பதையும் எல்லோரும் புரிந்து கொள்ள வேண்டிய தேவை இருக்கிறது.

இலங்கை மக்கள் சார்பாக சவூதி அரேபிய அரசாங்கத்திற்கு நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.

-எஸ். சினீஸ் கான்

Related posts

நாளை 12 மணிநேர நீர் வெட்டு

வடக்கு-தென்-கிழக்கு-மேற்கு என்ற பாகுபாடு வேண்டாம் – அநுர

பொருளாதாரத்தை உயர்த்துவதில் இரவுநேர பொழுதுபோக்குகள் முக்கிய பங்கு – டயானா கமகே