சமூக ஊடகங்கள் ஊடாக யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன்ஒரு வீடியோவை வெளியிட்டு ஒரு செய்தியை தெரிவித்துள்ளார், குறிப்பாக நல்லூர் ஆலயம் முன்னர் ஒரு காலத்தில் அந்த கிறிஸ்தவ ஆலயம் இருக்கும் இடத்திலதான் இருந்தது என்றும் எனவே அதனை உடைப்பார்களா என்ற தொனியிலும் கருத்துத் தெரிவித்துள்ளார் இதன் மூலம் இந்து மதத்தவர்களுக்கும் கிறிஸ்தவ மத்ததவர்களுக்கும் இடையே மதக் கலவரத்தை அர்ச்சுனா தூண்டுகிறாரா என்று கேள்வி எழுப்பும் வகையில் உள்ளது.
நல்லூர் ஆலயம் இடிக்கப்பட்டு கோட்டை கட்டப்பட்டது. ஆகவே கோட்டையை இடிப்பர்களா என்ற வினாவைத் தொடுத்துள்ளார்.
இப்படியான சந்தர்ப்பதில் இந்த நிலைமை இருக்கும்போது அந்த தையிட்டி விஹாரையை உடைக்கச் சொல்வது சரிதானா என்ற பாணியில் அவர் கருத்து தெரிவித்துள்ளார் .
இவரது உள்நோக்கம் தையிட்டி விஹாரைக்கு எதிர்ப்பு தெரிவிப்பது அநாவசியம் என்பதேநாகும்.
இதனால் தையிட்டி விஹாரை அமைவிடத்துக்கு மறைமுகமாக ஆதரவையும் அர்ச்சுனா தெரிவிக்கிறார் என்பதை தமிழ் மக்கள் உணராமல் இல்லை
எனவே, மதக் கலவரத்தை தூண்டும் வகையில் அவரது காணொளி அமைந்துள்ளமை தொடர்பில சர்வதேச இந்துமத பீடம் பெரும் கவலை கொண்டுள்ளது என நெரித்துள்ளது.
