அரசியல்உள்நாடுபிராந்தியம்

மண்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலர் உணவுப் பொருட்களை வழங்கி வைத்தார் பீ. ஆரியவங்ஷ எம்.பி

மண்சரிவில் பாதிக்கப்பட்ட ஹேயஸ் தோட்ட மக்களுக்கு இன்றையதினம் (24) இறக்குவானை தேர்தல் தொகுதியின் ஐக்கிய மக்கள் சக்தி அமைப்பாளரும் இரத்தினபுரி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான பீ. ஆரியவங்ஷ உலர் உணவுப் பொருட்களை வழங்கி வைத்தார்.

மேற்படி தஞ்சமடைந்துள்ள எட்டு குடும்பங்களையும் இறக்குவானை தேர்தல் தொகுதியின் ஐக்கிய மக்கள் சக்தி அமைப்பாளரும் இரத்தினபுரி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான பீ. ஆரியவன்ச இன்றையதினம் (24) நேரில் சென்று பார்வையிட்டதுடன் அவர்களுக்கு தேவையான உலர் உணவுப் பொருட்களையும் வழங்கி வைத்தார்.

இரத்தினபுரி மாவட்டத்தில் கொலன்ன பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட ஹேயஸ் தோட்டத்தின் பீ டிவிசனில் (Hayes Estate) நேற்று முன்தினம் (22) மண்சரிவு ஏற்பட்டுள்ளது.

மண்சரிவு காரணமாக மேற்படி தோட்டத்தைச் சேர்ந்த எட்டு குடும்பங்கள் ஹேயஸ் தோட்டத்தில் (Hayes Estate) அமைந்துள்ள பிரஜா சக்தி நிலையத்தில் தஞ்சமடைடைந்துள்ளனர்.

இதன்போது மேற்படி தோட்டப் பிரதேசத்தைச் சேர்ந்த சமூக சேவையாளர் எம்.விஸ்வநாதன் கருத்து தெரிவிக்கையில்,

மேற்படி தோட்டப் பிரிவில் தொடர்ந்து மண்சரிவு அபாயம் உள்ளதால் அப்பிரதேசத்தில் வாழும் மக்கள் அச்சம் காரணமாக ஹேயஸ் தோட்டத்தில் அமைந்துள்ள பிரஜாசக்தி நிலையத்தில் தஞ்சமடைந்து வருவதால், மேற்படி பிரஜாசக்தி நிலையத்தில் இட நெருக்கடி நிலவி வருவதாகவும் தெரிவித்தார்.

மேற்படி மண்சரிவு காரணமாக நேற்று முன்தினம் (22) ஐந்து குடும்பங்கள் பிரஜா சக்தி நிலையத்தில் தஞ்சமடைந்தனர்.
தற்போது அது எட்டு குடும்பங்களாக உயர்ந்துள்ளனர்.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உதவிகளை விரைவில் முன்னெடுக்க உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்குமாறும் சமூக சேவையாளர் எம்.விஸ்வநாதன் மேலும் தெரிவித்தார்.

-சிவா ஸ்ரீதரராவ் இரத்தினபுரி நிருபர்

Related posts

தொடர்ச்சியாக 5 நாட்களுக்கு நாடாளுமன்ற அமர்வுகள்

4,874 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்

ஹேமசிறி மற்றும் பூஜித் மீண்டும் விளக்கமறியலில் [VIDEO]