மட்டக்களப்பு மாவட்டம், களுவாஞ்சிக்குடி, பட்டிருப்பு, போன்ற கிராமங்களில் கன மழையினால் வெள்ள நீர் புகுந்துள்ளமையினால் தாழ் நிலங்கள் பல நீரில் மூழ்கின.
மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபை தவிசாளர் மேகசுந்தரம் வினோராஜ், உதவித்தவிசாளர் மே.வினோராஜ், பிரதேச சபை உறுப்பினர்கள் எனப்பலரும் சம்பவ இடத்திற்கு வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
அவசரகால நிலைமையை கருத்தில் கொண்டு, வீதியை வெட்டி , பொதுமக்கள் விடுத்த கோரிக்கைக்கு அமைய வெள்ள நீரை வழிந்தோட செய்யும் வகையில், JCB இயந்திரம் மூலம் பாதுகாப்பாக தற்காலிக கால்வாய்களால் நீர் வடிந்தோடச்செய்யப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
-மட்டக்களப்பு நிருபர் ஸோபிதன் சதானந்தம்
