மட்டக்களப்பு உன்னிச்சை குளத்தை அண்டிய பகுதியில் இன்று (13) அதிகாலை மக்கள் குடியிருப்புக்குள் புகுந்த காட்டு யானைகள் 10 இற்கு மேற்பட்ட வீடுகளை முற்றாகவும் பகுதியளவிலும் சேதப்படுத்தியுள்ளதுடன், பல பயன் தரும் மரங்களையும் சேதப்படுத்தியுள்ளது.
உன்னிச்சை பகுதியை சேர்ந்த வயோதிப பெண்னொருவர் இன்று (13) அதிகாலை யானையின் தாக்குதலுக்கு உள்ளாகி கவலைக்கிடமான நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அண்மை காலமாக யானைகளின் அட்டகாசம் அதிகரித்துள்ளதால் வவுணதீவு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட உன்னிச்சை, இருநூறுவில், நெடியமடு, ஆறாம் கட்டை மற்றும் எட்டாம் கட்டை ஆகிய பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக தொடர்ச்சியாக உயிர் அச்சுறுத்தலை மேற்கொண்டு வருவதுடன், குடியிருப்புக்கள், வயல் வாடிகள் உள்ளிட்ட பயன் தரும் மரங்களையும் சேதப்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.