உள்நாடுபிராந்தியம்

மட்டக்களப்பு ஆரையம்பதி, பாலமுனை நகர் பகுதிக்குள் இரவு வேளையில் நுழைந்த காட்டு யானைகள்

மட்டக்களப்பு ஆரையம்பதி, பாலமுனை நகர் பகுதிக்குள் இரவு வேளையில் திடீரென உள் நுழைந்த காட்டு யானைகளால் மக்கள் பதற்றமடைந்துள்ளனர்.

இதவேலை குறித்த பகுதிக்குள் இரவு நேரம் உள் நுழைந்த காட்டு யானைகள் பாலமுனை நகர் பகுதி பாடசாலை ஒன்றின் முன் நுழைவாயில் கதவினை உடைத்து, சேதப்படுத்தியதோடு மக்கள் குடியிருப்பு கானி சுற்றுப்புற வேலிகளை துவம்சம் செய்து ஆரையம்பதி நகர் பகுதிக்குள் உள் நுழைந்து வேலிகளை சேதப்படுத்தின.

பின்னர் இதனை அவதானித்த பிரதேசவாசிகள் பாலமுனை, ஆரையம்பதி நகர் பகுதிக்குள் இரவில் திடீரென உள் நுழைந்த இரண்டு காட்டு யானைகள் சஞ்சரிப்பதை பிரதேசிவாசிகள் அவதானித்து காட்டு யானைகள் துரத்தும் பணியில் ஈடுபட்டு விரட்டி அடித்தனர்

இந்தக் காட்டுயானைகள் கடந்த ஒன்றரை மாதத்திற்கு மேலாக உணவுதேடி சுற்றித்திரிந்து அச்சுறுத்தி வருவதாகவும் பிரதேச வாசிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

-ஸோபிதன் சதானந்தம்

Related posts

வெளிநாடுகளிலுள்ள இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை

மேலும் 20 இலட்சம் சைனோபாம் தடுப்பூசிகள் தாயகத்திற்கு

இன்றைய மின்வெட்டு நேரத்தில் நீடிப்பு