வகைப்படுத்தப்படாத

மட்டக்களப்பில் சர்வதேச புகைத்தலுக்கு எதிரான தினம்

(UDHAYAM, COLOMBO) – சர்வதேச புகைத்தலுக்கு எதிரான தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்டத்துக்கான முதலாவது கொடி மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ஸ்க்கு வழங்கப்பட்டது.

மாவட்ட திவிநெகும பிரதிப்பணிப்பாளர் எம்.குணரெத்தினம், திவிநெகும வங்கி முகாமையாளர்கள் மற்றும் அதிகாரிகள் மாவட்ட அரசாங்க அதிபருக்கு கொடியை நேற்றி வழங்கி வைத்தனர்.

நேற்று ஆரம்பமான கொடிவாரம் ஜூன் மாதம் 30ம் திகதி வரை ஒரு மாத காலத்திற்கு நடைமுறைப்படுத்தப்படுகிறது.

நாடளாவிய ரீதியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள குறித்த கொடி செயற்திட்டம் இவ்வருடம் ‘தீய பழக்கங்களை ஒழித்து நிரந்தர மகிழ்ச்சியை அனுபவிப்போம் – ஆரோக்கியமான தேசத்தை கட்டியெழுப்புவோம்’ எனும் தொனிப்பொருளில் நடைபெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts

வங்கக் கடலில் நிலநடுக்கம்

சூப்பரான தேங்காய் பிஷ் பிரை செய்வது எப்படி?

President appoints new SLFP Organisers