உள்நாடுபிராந்தியம்

மங்கள சமரவீரவின் செயலாளர் உட்பட இருவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் – ஒருவர் உயிரிழப்பு!

கந்தானை பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் காயமடைந்தவர்களில் ஒருவர்
உயிரிழந்துள்ளார்.

மறைந்த அமைச்சர் மங்கள சமரவீரவின் தனிப்பட்ட செயலாளர் சமீர மனஹார இந்தச் சம்பவத்தில் படுகாயமடைந்துள்ளார்.

இன்று (03) காலை கந்தானை பொதுச் சந்தைக்கு அருகில் காரில் இருந்த இருவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த இருவரும் ராகம மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் 50 வயதான ஒருவர் உயிரிழந்துள்ளார்.

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த மறைந்த அமைச்சர் மங்கள சமரவீரவின் தனிப்பட்ட செயலாளர் சமீரா மனஹார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்

Related posts

பிரபல அரசியல்வாதி ஒருவரின் மகனை அச்சுறுத்தி தங்க நகை கொள்ளை!

கொரோனா நோயாளிகள் 650 பேர் சிகிச்சையில்

முதலாம் தவ​ணை கல்வி நடவடிக்கைகள் இன்றுடன் நிறைவு