அரசியல்உள்நாடு

மக்கள் விடுதலை முன்னணிக்கு 3 சதவீத வாக்குகளைப் பெற 57 வருடங்கள் சென்றது – எங்களுக்கு வெறுமனே 7 மாதங்களில் 4 சதவீத வாக்குகள் கிடைத்துள்ளன – திலித் ஜயவீர எம்.பி

இம்முறை உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் 227 சபைகளுக்காக போட்டியிட்ட நிலையில், 226 ஆசனங்களை கைப்பற்றியுள்ளதாக சர்வஜன அதிகாரத்தின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான திலித் ஜயவீர தெரிவித்தார்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து,

விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் ​போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து வௌியிட்ட பாராளுமன்ற உறுப்பினர் திலித் ஜயவீர, மொத்தமாக நாம் போட்டியிட்ட உள்ளூராட்சி சபைகளின் எண்ணிக்கைக்கு நிகராக உறுப்பினர் எண்ணிக்கையை பெற்றுள்ளளோம்.

மக்கள் விடுதலை முன்னணிக்கு 3 சதவீத வாக்குகளைப் பெற 57 வருடங்கள் சென்றது, ஆனால் எங்களுக்கு வெறுமனே 7 மாதங்களில் 4 சதவீத வாக்குகள் கிடைத்துள்ளன.

நாங்கள் ஒரு உண்மையான நேர்த்தியான வேலைத்திட்டங்களை முன்வைத்தோம்.

அதற்கு மக்கள் சிறந்ததொரு பெறுபேற்றினை வழங்கியுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

Related posts

கம்பஹா மாவட்டத்தில் தொடர்ந்தும் ஊரடங்கு

முகக்கவசம் அணியாத நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் தடைகள்