வகைப்படுத்தப்படாத

ப்ரியன்ஜித் விதாரண பதவி விலகினார்

(UTV|COLOMBO)-தேசிய சுதந்திர முன்னணியின் பொதுச்செயலாளர் ப்ரியன்ஜித் விதாரண பதவி விலகியுள்ளார்.

நேற்று இடம்பெற்ற கட்சிக்கூட்டத்தின் போது அவர் தனது பதவி விலகல் கடிதத்தை கையளித்துள்ளதாக தேசிய சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் பத்ம உதயசாந்த குணசேகர தெரிவித்துள்ளார்.

சுகாதார மற்றும் தனிப்பட்ட காரணங்களால் அவர் குறித்த பதவியில் இருந்து விலகியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இதற்கு முன்னர் தேசிய சுதந்திர முன்னணியின் தேசிய அமைப்பாளர் பியசிறி விஜேநாயக்க கட்சித் தலைவரை விமர்சித்து அறிவிப்பொன்றை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

 

எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள
REG<space>utv 
என Type செய்து 77000 என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள்.

 

 

 

Related posts

சாலையில் படகை நிறுத்தி போராட்டம் -60 பேர் கைது

வட கொரியா மற்றும் அமெரிக்க அதிபர்கள் சந்திப்பு

Emmy winning actor Rip Torn passes away at 88