30 வருட யுத்தத்தை தோற்கடிக்க இராணுவ வீரர்கள் ஆற்றிய உன்னத சேவையின் காரணமாகவே நாட்டில் சமாதானம், நல்லிணக்கம், தேசிய ஒருமைப்பாடு, அரசியல் சுதந்திரம் என்பன பாதுகாக்கப்பட்டன.
2019 ஆம் ஆண்டு கூட, புறக்கோட்டையில் இவர்கள் முன்னெடுத்த ஆர்ப்பாட்டத்தில், அங்கு சென்று இவர்களோடு கலந்துரையாடி, இந்தப் பிரச்சினைகள் கேட்டறிந்தோம்.
என்றாலும் இந்த பிரச்சினைகளை தீர்த்து வைப்பதற்கு எமக்கு சந்தர்ப்பம் கிட்டவில்லை என எதிரக்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
இராணுவ வீரர்களால் ஜனநாயகம் பாதுகாக்கப்படுவதால், அவர்கள் ஏராளமான அநீதிகளை எதிர்கொள்கின்றனர். 2025 வரவுசெலவுத் திட்டத்தின் அனைத்து அரச ஊழியர்கள் மற்றும் ஆயுதமேந்திய படை வீரர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியங்கள் திருத்தங்களுக்கு உள்ளாக்கினாலும், முப்படை, பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினரின் ஊனமுற்ற ஓய்வூதியதாரர்கள் மற்றும் உயிர்நீத்த இராணுவ வீரர்களின் விதவைகளுக்கு கிடைக்க வேண்டி உரிமைகள் பறிக்கப்பட்டுள்ளன.
மருத்துவ காரணங்களுக்காக ஓய்வு பெற்ற ஊனமுற்ற இராணுவ வீரர்களுக்கு விசேட சலுகைகள் மற்றும் ஓய்வூதியங்களை வழங்குவதற்கு சட்டபூர்வமான அடிப்படை காணப்பட்ட போதிலும், இவர்களுக்கும் கிடைக்க வேண்டிய உரிமைகள் கிடைத்தபாடில்லை என்றும், அரசாங்கம் இந்த சலுகைகளை குறைப்பதற்கு எடுக்கும் நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
55 வயது பூர்த்தியானதும், ஓய்வுபெற்ற உயிரிழந்த ஊனமுற்ற இராணுவ வீரர்களின் பெற்றோர்கள் மற்றும் மனைவிகளுக்கு வழங்க வேண்டிய நிலையான கொடுப்பனவுகளைக் கூட இந்த அரசாங்கம் சட்டவிரோதமாக நிறுத்தி வைத்துள்ளதாகவும், காணாமல் போனவர்களின் குடும்பங்களுக்கு வழங்க வேண்டிய சலுகைகளையும் ஏதோ ஒரு வழிமுறையின் அடிப்படையில் நிறுத்தப்பட்டுள்ளன என்றும், இதுபோன்ற பொய்யான காரணங்களை முன்வைத்து, ஊனமுற்ற இராணுவ வீரர்களுக்கு வழங்கப்படும் சலுகைகளை வெட்டாமலும், குறைக்காமலும் அவற்றை உடனடியாக அவர்களுக்குப் பெற்றுக் கொடுக்குமாறும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கோரிக்கை விடுத்தார்.
ஊனமுற்ற இராணுவ வீரர்கள் இன்று (24) பாராளுமன்றத்திற்கு அருகில் உள்ள பொல்துவ சந்தியில் முன்னெடுத்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று கருத்துத் தெரிவிக்கும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.
நிர்வாகச் சிக்கல்கள் ஊனமுற்ற இராணுவ வீரர்கள் விடயத்தை விட்டும் அப்பாற்பட்டது. நாட்டிற்காக இவர்கள் செய்த உன்னத தியாகங்களை கருத்திற் கொண்டு, நிர்வாகப் பிரச்சினைகளை முன்னிலைப்படுத்தி அதன் அடிப்படையில் இவர்களுக்கான சலுகைகளைக் குறைக்க வேண்டாம் என்றும், இந்த உரிமைகள் அனைத்தையும் ஊனமுற்ற இராணுவ வீரர்களுக்கும் அவர்களினது குடும்பத்தினருக்கும் பெற்றுக் கொடுக்குமாறும், ஒவ்வொரு தனிநபரின் விருப்பத்தினாலோ பெயரில் அல்லாமல், சில சட்ட அடிப்படைகளுக்குள், இராணுவ வீரர்களுக்கான இந்த சலுகைகளைப் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்குமாறும் எதிர்க்கட்சித் தலைவர் கோரிக்கை விடுத்தார்.
பாதுகாப்பு படையினர் தமது சக இராணுவ வீரர்களுக்கு தீங்கு விளைவிக்காமல் அவர்களைப் பாதுகாப்பது பொலிஸார் உள்ளிட்ட அனைவரினதும் பொறுப்பாகும் என்பதால், இந்த பிரச்சினைகளை மீண்டும் ஒருமுறை பாராளுமன்றத்தில் முன்வைக்க நடவடிக்கை எடுப்பேன்.
அமெரிக்கா கூட தமது நாட்டின் இராணுவ வீரர்களை மிக உயர்வாக மதிக்கிறது. அதிலிருந்து பாடங்களைக் கற்றுக்கொண்டு, பயங்கரவாதத்தை தோற்கடித்த இந்த இராணுவ வீரர்களை நாம் மறந்துவிடக் கூடாது.
ஆகவே இவர்களுக்குத் தகுதியான சலுகளைப் பெற்றுக் கொடுக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் இதன்போது அரசாங்கத்திடம் கேட்டுக்கொண்டார்.
