உள்நாடு

போலி யுவான் நாணயத்தாள்களுடன் சீன பிரஜை கைது!

இரத்தினபுரி, திருவனகெட்டிய பிரதேசத்தில் போலி சீன யுவான் நாணயத்தாள்களுடன் சீன பிரஜை ஒருவர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபரான சீன பிரஜை கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கைதுசெய்யப்பட்டவர் 28 வயதுடைய சீன பிரஜை ஒருவர் ஆவார்.

சந்தேக நபரான சீன பிரஜையிடமிருந்து போலியாக தயாரிக்கப்பட்ட 100 சீன யுவான் நாணயத்தாள்கள் நான்காயிரம் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

இதனையடுத்து கைதுசெய்யப்பட்ட சீன பிரஜை மேலதிக விசாரணைகளுக்காக கஹவத்தை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கஹவத்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

2024 ஆம் ஆண்டின் சுற்றறிக்கை வெளியீடு – நிதி அமைச்சு.

சாணக்கியனை கடுமையாக சாடிய ரோஹித்த

கம்மன்பில குழுவினர் நாளை பிரதமரை சந்திக்க உள்ளனர்