உள்நாடு

போலி கைத்துப்பாக்கி, போதைப்பொருட்களுடன் பிரபல ராப் பாடகர் கைது

‘மாதவ் பிரசாத்’ என்று அழைக்கப்படும் ‘மதுவா’ என்ற ராப் பாடகர், போலி கைத்துப்பாக்கி மற்றும் போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்டதாக கஹதுடுவ பொலிஸார் தெரிவித்தனர்.

ஆறு பேர் கொண்ட குழு, போதைப்பொருள் மற்றும் கைத்துப்பாக்கியை வைத்திருந்து போதைப்பொருள் உட்கொள்வதைக் காட்டும் பேஸ்புக் வீடியோ தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் பின்னர், ஹோமாகம பகுதியில் உள்ள வீட்டு வளாகத்தில் சந்தேகநபரை கஹதுடுவ பொலிஸார் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் மேலும் விசாரணை நடத்தியதில், அவர் தனது பேஸ்புக் பயனர் எண்ணிக்கையை அதிகரிக்க போதைப்பொருள் உட்கொள்ளும் வீடியோக்களை பதிவேற்றியிருப்பது தெரியவந்தது.

சந்தேகநபரிடமிருந்து 20 மில்லிகிராம் ஐஸ் மற்றும் 35 கிராம் ஹஷீஷ் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

26 வயதுடைய இந்த சந்தேகநபர் கெஸ்பேவ நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

கஹதுடுவ பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி, பிரதான பொலிஸ் பரிசோதகர் தமித பெரேராவின் அறிவுறுத்தலின் பேரில் குற்றப் புலனாய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் ரஜித குருசிங்க உள்ளிட்ட குழு விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.

Related posts

செலுத்துவதற்கு டாலர்கள் இல்லாமல் துறைமுகத்தில் தவிக்கும் எண்ணெய் தாங்கிகள்

இலங்கை மாணவர்களை அழைத்து வர விசேட விமான சேவை

சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட மோட்டார் சைக்கிள்கள் விவகாரம் – பறவைகள் பூங்காவின் உரிமையாளருக்கு பிணை!

editor