குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் உதவி கட்டுப்பாட்டாளர் ஒருவரைக் கைது செய்துள்ளது.குற்றப் புலனாய்வுத் துறையினர் கைது செய்துள்ளனர்.
துபாயில் மறைந்திருக்கும் ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான கெஹெல்பத்தர பத்மேவுக்கு போலி கடவுச்சீட்டுகளை தயாரித்த குற்றச்சாட்டின் பேரில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த சந்தேக நபர் ஏனைய ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளுக்காகவோ அல்லது வேறு நபர்களுக்காகவோ கடவுச்சீட்டுக்களை சட்டவிரோதமாக தயாரித்துள்ளாரா என்பதை கண்டறிய மேலும் விசாரணைகள் இடம்பெற்று வருவதாக குற்றப் புலனாய்வுத்துறையினர் தெரிவித்தனர்.