சூடான செய்திகள் 1

போலி ஆவணங்களை தயாரிக்கும் நிறுவனம் சுற்றிவளைப்பு – மூவர் கைது

(UTVNEWS|COLOMBO) – வத்தளை, கல்யான மாவத்தையில் போலியான ஆவணங்களை தயாரிக்கும் நிறுவனம் ஒன்று நீர் கொழும்பு விசேட குற்ற விசாரணைப் பிரிவினரால் சுற்றிவளைக்கப்பட்டதுடன், மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது, 18 போலியான அதிகாரப்பூர்வ முத்திரைகள் உள்ளிட்ட பல்வேறு போலியான ஆவணங்கள் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் வத்தளை, கனேமுல்ல மற்றும் மரதன்கடவல பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தேகநபர்கள் நீர் கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்

Related posts

மாத்தறை நகைக்கடை கொள்ளை – ஒருவர் கைது

திங்கள் முதல் 5,000 பஸ்கள், 400 ரயில்கள் சேவையில்

புகையிரதத்தில் மோதிய சிறுவன் பரிதாபமாக பலி