போலி அடையாள அட்டைகள் உள்ளிட்ட போலி ஆவணங்களைத் தயாரித்த பாணந்துறை பகுதியைச் சேர்ந்த ஒருவர், இலஞ்சம் ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் பேரில் நடத்தப்பட்ட விசாரணையின் போது, 2023 ஆம் ஆண்டின் 09 ஆம் இலக்க ஊழல் தடுப்புச் சட்டத்தின் பிரிவு 124 ஐ மீறியதற்காக இந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட நபர், பாணந்துறை, கொரகபொல பிரதேசத்தை சேர்ந்தவர் என தெரிய வந்துள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
