உள்நாடு

போலி அடையாள அட்டை தயாரித்த இருவர் கைது

(UTV|கொழும்பு ) – போலி அடையாள அட்டைகளைத் தயாரிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த இருவர் ஆட்பதிவுத் திணைக்கள வளாகத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை தொடர்ந்து மற்றுமொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வெல்லம்பிட்டி மற்றும் மருதானை ஆகிய பகுதிகளில் வசிக்கும் குறித்த சந்தேகநபர்கள் இன்று (20) கடுவளை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

Related posts

மலையக தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களையும் சந்திக்க ரணில் இணக்கம்- ஜீவன்

பங்களாதேஷிலிருந்த 276 இலங்கையர்கள் நாடு திரும்பினர்

தமிழ் தேசிய கட்சிகள் பாரிய போராட்டங்களை நடத்த தீர்மானம்!