உலகம்

போர்ச்சுகல்லில் கேபிள் ரயில் தடம் புரண்டது – 15 பேர் பலி – 18 பேர் காயம்

போர்த்துக்கல் தலைநகர் லிஸ்பனில் 140 ஆண்டுகள் பழமையான Gloria funicular கேபிள் ரயில் தடம்புரண்டதில், 15 பேர் உயிரிழந்தனர்.

மேலும் 18 பேர் காயம் அடைந்ததாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்தன.

ஐரோப்பிய நாடான போர்ச்சுகல்லின் தலைநகர் லிஸ்பனில் குளோரியா புனிகுலர் ரயில் பெட்டி தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.

குளோரியா புனிகுலர் ரயில், நகரத்தின் வரலாற்று சின்னமாகும். சுற்றுலா பயணிகள் மத்தியில் மிகவும் பிரபலமானது.

உயிரிழந்தவர்களில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் அடங்குவர் என அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் 18 பேர் காயம் அடைந்துள்ளனர்.

இதில் 5 பேர் நிலைமை மிகவும் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

இந்த சம்பவத்தை தொடர்ந்து போர்ச்சுகல் அரசு தேசிய துக்க தினத்தை அறிவித்துள்ளது. இந்த விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது.

Related posts

லெபனானில் இலங்கை பெண்ணின் சடலம் மீட்பு!

பிரிட்டனில் புலம்பெயர்ந்தவர்களுக்கு ஆதரவாகவும் எதிராகவும் போராட்டங்கள்

editor

பலஸ்தீனுக்கு ஆதரவாக பிரித்தானியாவில் ஆர்ப்பாட்டம் – 425 பேர் கைது

editor