வகைப்படுத்தப்படாத

போரை முடிவுக்கு கொண்டு வர வலியுறுத்தல்

(UTV|COLOMBO)-எலியும் பூனையுமாக இருந்த வடகொரியா, தென் கொரியா நாடுகளிடையே இருந்த போர்ப்பதற்றம் கடந்த மார்ச் மாதத்திற்கு பிறகு தணியத் தொடங்கியது.

போரை முடிவுக்கு கொண்டு வந்து, இணக்கமாக செல்வற்கு வடகொரிய ஜனாதிபதி முன் வந்ததை அடுத்து, ஏப்ரல் மாதம் 27 ஆம் திகதி இரு நாட்டு தலைவர்களிடையே வரலாற்று சிறப்பு மிக்க சந்திப்பு நடைபெற்றது.

வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன், தென்கொரிய ஜனாதிபதி முன் ஜே இன் ஆகியோர் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

இந்த சந்திப்பின்போது, 65 ஆண்டுகளாக நீடித்து வந்த கொரிய போரை முடிவுக்கு கொண்டு வரவும், கொரிய தீபகற்பத்தினை அணு ஆயுதமற்ற பிரதேசம் ஆக்கவும் உறுதி பூண்டனர்.

இந்நிலையில், கொரிய போரை முறைப்படி முடிவுக்கு கொண்டு வரும் வகையில், ஏப்ரல் மாதம் ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்ததை தீவிரமாக செயல்படுத்த வேண்டும் என தென் கொரியா அரசாங்கத்தை வடகொரியா வலியுறுத்தி உள்ளது.

இது தொடர்பாக வடகொரிய இணையதளத்தில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. அதில், போர்நிறுத்த ஒப்பந்தத்தை நிறைவேற்றக்கூடிய கடமை தென் கொரியாவுக்கு உள்ளதாகவும், இனியும் தாமதிக்கக்கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

මිහින්තලා පුදබිම ජාතික උරුමයක් ලෙස පත්කිරීමට කැබිනට් අනුමැතිය

Showers likely in evening or night

உலகின் மிக வயதான நபர் காலமானார்