வகைப்படுத்தப்படாத

‘போயிங் 737’ ரக விமானங்களுக்கு அமெரிக்காவில் தடையா?

சீனா, எத்தியோப்பியா, சிங்கப்பூரை தொடர்ந்து அமெரிக்காவிலும் ‘போயிங் 737 மேக்ஸ் 8’ விமானங்கள் தடைவிதிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.

எத்தியோப்பியா ஏர்லைன்சுக்கு சொந்தமான ‘போயிங் 737 மேக்ஸ் 8’ ரக விமானம் கடந்த ஞாயிற்றுக்கிழமை விபத்துக்குள்ளானதில் 157 பேர் உயிரிழந்தனர்.இச் சம்பவத்தை இதே ரக விமானம் இந்தோனேஷியாவில் கடந்த அக்டோபரில் விபத்துக்குள்ளானதில் 189 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும்  ‘போயிங் 737 மேக்ஸ் 8’ ரக விமானங்களின் பாதுகாப்பு குறித்து கேள்வி எழுந்ததால் சீனா, எத்தியோப்பியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகள் அந்த ரக விமானங்களை இயக்க தற்காலிக தடை விதித்துள்ளது.

இந்தநிலையில், ‘போயிங் 737 மேக்ஸ் 8’ விமானங்களில் பாதுகாப்பு தொடர்பான பிரச்சினை இருப்பதை விமானப் போக்குவரத்து நிர்வாகம் கண்டறிந்தால், உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அமெரிக்காவின் மத்திய விமான போக்குவரத்துறை தெரிவித்துள்ளது.

 

 

 

 

Related posts

ASAP Rocky arrested in Sweden on suspicion of assault

හෙට (16) සිට වැසි සහිත කාලගුණයේ තරමක වැඩිවීමක්

678 பேர் எயிட்ஸ் நோயினால் இறப்பு