உள்நாடுபிராந்தியம்

போத்தலால் தாக்கி ஒருவர் கொலை – 24 வயதுடைய நபர் கைது

திஸ்ஸமஹாராம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சந்துங்கம பிரகதி மாவத்தை பகுதியில் உள்ள கால்வாயில் இருந்து சடலமொன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.

நேற்று (17) மாலை திஸ்ஸமஹாராம பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

உயிரிழந்தவர் திஸ்ஸமஹாராம பிரதேசத்தைச் சேர்ந்த 45 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.

தனிப்பட்ட தகராறு காரணமாக நண்பர் ஒருவரை போத்தலால் தாக்கி நீரில் மூழ்கடித்து கொலை செய்துள்ளதாக தற்போதைய விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் 24 வயதுடைய சந்தேகநபரான நண்பர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், திஸ்ஸமஹாராம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

Related posts

பிரதான 14 உற்பத்திகளுக்கான உத்தரவாத விலை நிர்ணயம்

ஜனாதிபதி இராணுவத் தலைமையத்திற்கு திடீர் விஜயம்

சொத்துக்களை அறிவிக்காத அரச ஊழியர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை – இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு

editor