அரசியல்உள்நாடு

போதைப்பொருள் தடுப்புக்கு எதிராக அரசாங்கம் இரட்டை வேடம் போடுகிறது – நாமல் எம்.பி குற்றச்சாட்டு

போதைப்பொருள் தடுப்புகளை முன்னெடுக்கும் அரசாங்கமானது தமக்கு சார்பானவர்களுக்கு ஒரு முகத்தையும் தனக்கு எதிரானவர்களுக்கு இன்னொரு முகத்தையும் காட்டிக்கொண்டு பாரபட்சமாக இந்த நடவடிக்கைகளை மேற்கொள்வதாக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார்.

கொழும்பில் இன்று (30) நடைபெற்ற நிகழ்வு ஒன்றின் பின்னர் நாட்டு நிலைமைகள் சம்பந்தமாக ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இக்கருத்தினை முன்வைத்தார்.

அத்துடன் நாட்டின் தேசிய பாதுகாப்பு சம்பந்தமாக வகுப்பு எடுத்த அரசாங்கம், இன்று தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் உள்ள நிலையை மறந்துள்ளதாகவும் குற்றச்சாட்டினார்.

Related posts

30 வயது இளைஞன் போதைப்பொருளுடன் வாழைச்சேனை பொலிஸாரால் கைது

editor

நாடளாவிய ரீதியில் நாளை முதல் அடையாளப் பணிப்புறக்கணிப்பு

இஸ்ரேல்-பலஸ்தீன் போரால் காசாவில் வைத்தியசாலைகள் நிரம்பி வழிகிறது!