வகைப்படுத்தப்படாத

போதைப்பொருட்களுடன் நபரொருவர் கைது

(UTV|COLOMBO)-தெமட்டகொட பிரதேசத்தில் பல வகையான போதைப்பொருட்களை தம்வசம் வைத்திருந்த நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு மத்திய சட்டத்தை வலுப்படுத்தும் பிரிவின் அதிகாரிகள் நேற்று இரவு மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரிடமிருந்து ஐஸ் ரக போதைப்பொருள் 45 கிராமும், கொக்கேய்ன் 5 கிராமும், ஹேஸ் ரக போதைப்பொருள் 47 கிராமும் காவல்துறையால் கைப்பற்றப்பட்டுள்ளது.

சந்தேக நபர் தெமட்டகொட பிரதேசத்தை சேர்ந்தவருடன், அவர் இன்று மாளிகாகாந்த நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள
REG<space>utv 
என Type செய்து 77000 என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள்.

 

Related posts

Ceylon Tea global promotional campaign to kick-start in Russia

Corruption case against Wimal fixed for Aug. 08

ஒவ்வொரு வௌ்ளிக்கிழமையும் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை