உள்நாடு

போதைப்பொருட்களுடன் 7 பேர் கைது

(UTV | கொழும்பு) – கொழும்பு, மோதர பகுதியில் 18,900 போதை மாத்திரைகளுடன் லொறி ஒன்றில் பயணித்துக் கொண்டிருந்தபோது இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட போதை வில்லைகளின் பெறுமதி 4.7 மில்லியனுக்கு அதிகம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, ஐஸ், கேரளா கஞ்சா, போதை வில்லைகள் உள்ளிட்ட போதைப்பொருட்களுடன் களுத்துறை-வஸ்கடுவ பகுதியில் வைத்து ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது குறித்த சந்தேக நபர்களிடமிருந்து ஐஸ் ரக போதைப்பொருள் 14.2 கிராம், கேரள கஞ்சா 22 கிராம், 27 போதை வில்லைகள் மற்றும் 64 ஆயிரம் ரூபா பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Related posts

தளம்பல் நிலை காரணமாக அடிக்கடி இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

editor

எமது தேசத்தின் பிள்ளைகள் இழந்துள்ளவற்றை மீள பெற்றுக்கொடுப்பதே எமது எதிர்பார்ப்பு

தையிட்டி விகாரை பிரச்சினைக்கு விரைவில் முற்றுப்புள்ளி – அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்

editor