உள்நாடு

போதை மாத்திரைகளுடன் பேருவளையில் முன்னாள் படை வீரர் கைது

(UTV | கொழும்பு) – பேருவளை நகரில் வீதிச் சோதனையில் ஈடுபட்டு வந்த பொலிஸார் இரு மோட்டார் சைக்கிள்களை நிறுத்தி சோதனையிட்ட போது அவற்றில் மிகவும் சூசகமான முறையில் மறைத்துக் கொண்டு செல்லப்பட்ட சுமார் 1, 350 போதை மாத்திரைகளைக் கைப்பற்றப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் மூவர் கைது செய்யப்பட்டனர்.அவர்களில் முன்னாள் இராணுவ வீரர் ஒருவரையும் மருந்து விற்பனை பிரதிநிதி ஒருவரையும் அவர்களுடன் பயணித்த மேலும் ஒருவரையும் கைது செய்துள்ளனர்.

இவர்களிடமிருந்து பயணித்த இரு மோட்டார் சைக்கிள்களையும் மூன்று கைத்தொலைபேசிகளையும் கைப்பற்றப்பட்டுள்ளது.

Related posts

இருநாடுகளில் இருந்து நாடு திரும்பிய 304 இலங்கையர்கள்

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை தொடர்பில் விசேட அறிவிப்பு

editor

2000 கிராம உத்தியோகத்தர்களை சேவையில் இணைக்க நடவடிக்கை