உள்நாடு

போதுமான அளவு மருந்துப் பொருட்கள் கையிருப்பில் உள்ளது

(UTV|கொழும்பு) – நாட்டில் தேவைக்கேற்ப போதுமான அளவு மருந்துப் பொருட்கள் கையிருப்பில் இருப்பதாக அகில இலங்கை தனியார் மருந்தக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதனால் பொது மக்கள் தேவையற்ற குழப்ப நிலையை ஏற்படுத்திக் கொள்ள வேண்டாம் என்றும்; சங்கம் தெரிவித்துள்ளது.

தட்டுப்பாடு இன்றி, தொடர்ச்சியாக மருந்துகளை பொதுமக்களுக்கு விநியோகிப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தேவைக்கு அதிகமான மருந்துகளை களஞ்சியப்படுத்த வேண்டிய தேவை இல்லை என்றும் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

தேவைக்கு அதிகமான மருந்துகளை வைத்திருப்பதன் மூலம் அதன் தரம் குறைவடைவதாகவும் அகில இலங்கை தனியார் மருந்தக உரிமையாளர்கள் சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.

Related posts

எதிர்காலத்தில் இனிமேல் இரத்த வெள்ளம், மரண அச்சம் போன்றவை இடம்பெறாதிருக்கட்டும்

கொவிட் தொற்றாளர்களை அழைத்துச் சென்ற பஸ் விபத்து

ராஜித சேனாரத்ன இன்று நீதிமன்ற முன்னிலையில்