கேளிக்கை

போட்டோகிராபருடன் ஸ்ரத்தா கபூர் திருமணம்?

பிரபாஸ் நடிக்கும் சாஹோ படத்தில் நடிக்கிறார், பாலிவுட் நடிகை ஸ்ரத்தா கபூர். இப்படம் ரிலீசாவதற்கு முன்பே அவரைப் பற்றிய காதல் மற்றும் திருமண கிசுகிசுக்கள் காட்டுத்தீ போல் பரவி வருகிறது. ஸ்ரத்தா கபூருக்கும், பாலிவுட் போட்டோகிராபர் ரோஹன் ஷிரெஷ்தாவுக்கும் காதல் மலர்ந்துள்ளது. விரைவில் அவர்கள் திருமணம் செய்துகொள்ள திட்டமிட்டுள்ளனர். அடுத்த ஆண்டு திருமணம் நடக்கும் என்று கூறப்படுகிறது. ஸ்ரத்தா கபூருக்கு 32 வயதாகிறது. எனவே, குடும்பத்தினர் அவரை திருமணம் செய்துகொள்ளும்படி வற்புறுத்துகின்றனர்.

முன்னதாக, டென்னிஸ் வீராங்கனை சாய்னா நேவால் பயோபிக்கில் நடிக்க சம்மதித்த ஸ்ரத்தா கபூர், ஒரு வருடம் பேட்மின்டன் பயிற்சி பெற்ற நிலையில், திடீரென்று படத்தில் இருந்து விலகினார். திருமண விவகாரத்தால் ஸ்ரத்தா கபூர் விலகினார் என்று சொல்லப்பட்டாலும், கடுமையான பயிற்சி பெற்றும் சாய்னா நேவால் காட்டும் எனர்ஜி அளவுக்கு ஈடுசெய்து தன்னால் நடிக்க முடியாது என்பதாலேயே விலகியதாக, ஸ்ரத்தா கபூர் தரப்பில் கூறப்படுகிறது.

 

 

 

 

Related posts

வளை ஓசை நாதம் ஏழுக்கான ஆக்கங்கள் கோரல்

சிறந்த திரைப்படம், நடிகர், நடிகைக்கான ஒஸ்கார் விருதுகள்

எமியின் திருமணம் நடக்கவுள்ள இடம் இதுதான்?